தனது இரட்டை சிசுக்களை 50,000 ரூபாய்க்கு விற்ற இளம் தாய் கைது!
கைது செய்யப்பட்டுள்ள இளம் தாய், ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு, காசல் மகப்பேறு வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டை சிசுக்களைப் பிரசவித்திருந்த இளம் தாய் ஒருவர் 50,000 ரூபாய்க்கு தனது சிசுக்களை விற்பனை செய்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், களனி பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணுக்குமே தன்னுடைய இரு பச்சிளம் சிசுக்களையும் தலா 25,000 ரூபாய் வீதம் அவர் இவ்வாறு விற்பனை செய்துள்ளார்.
இதனையடுத்து, பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளம் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, அவரிடம் முன்னெடுத்த விசாரணையை அடுத்து, சிசுக்களை வாங்கிய பெண்கள் இருவரையும் அவர்களின் பிரதேசங்களில் வைத்து இன்று (07) காலை பொலிஸார் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள இளம் தாய், ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.