பெண்களுக்கு அதிகாரமளிக்கும் "சுஹுருலிய" சர்வதேச கவனத்தில்
சைபர்ஸ்பேஸ் (Cyber பகுதி) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் வருடாந்தம் நடத்தப்படும் சைபர்ஸ்பேஸ் ஒத்துழைப்புக்கான (Cyber Fellowship) மகளிர் திட்டத்தில் இந்த ஆண்டு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) பெற்றுள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தின் திறன் அபிவிருத்தியின் சிரேஷ்ட முகாமையாளர் திருமதி. சாதிகா யஹம்பத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சைபர்ஸ்பேஸ் (Cyber பகுதி) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தினால் (ICTA) நடைமுறைப்படுத்தப்பட்ட 'சுஹுருலிய' எனும் ‘புதுமைப்பெண்’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பெண்கள் சமூகத்தின் வலுவூட்டலுக்கான இலங்கையின் பங்களிப்பு, இந்த பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு இலங்கைக்கு மிக முக்கியமான அளவுகோலாக இருந்தது.
சுஹுருலிய திட்டத்தின் கீழ், இலங்கையில் 17,000 கிராமப்புற பெண்கள் நேரடியாகவும் மேலும் 175,000 பேர் மறைமுகமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் அதிகாரம் அளிக்க முடிந்தது. பெண் தொழில்முனைவோர் என்ற வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 1.2 பில்லியன் ரூபாவை இந்நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு ஈட்டியுள்ளனர். சுஹுருலியவின் முதல் கட்டத்தின் மிக உயர்ந்த வெற்றியின் அடிப்படையில், அதன் இரண்டாம் கட்டம் தற்போது நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் பெண்களின் மேம்பாட்டிற்கு உழைக்கும் திட்டங்களைப் படிப்பதற்கும், உலகளாவிய பங்குதாரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதுக்கும், உலகளாவிய பெண்கள் திட்டங்களை வழிநடத்தும் நபர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளை பெறுவதற்கும் சாத்தியமானது என்று திருமதி. சாதிகா யஹம்பத் கூறினார்.
அந்தந்த துறைகளில் வல்லுநர்கள் மற்றும் இராஜதந்திரிகளால் இந்த பதினைந்து நாள் நிகழ்ச்சியில், கலந்துரையாடல்கள், விரிவுரைகள், பட்டறைகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டது. மற்றும் சைபர் (Cyber) பகுதியில் பணிபுரியும் பாலின இடைவெளியைக் குறைப்பதன் மூலம் உலகளாவிய விவாதங்களில் பெண்களின் கருத்துகளுக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பது இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான இலக்காக இருந்தது.
பல நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒவ்வொரு நாட்டின் சைபர்ஸ்பேஸ் (Cyber பகுதி) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பெண்களின் சமூகத்தை மேம்படுத்துவதில் தீவிரமாகப் பங்களிக்கும் சுமார் ஐம்பது பெண்கள் இந்த ஒத்துழைப்புத் திட்டத்தில் பங்கேற்றனர்.