கண்டி  விபத்தில் யுவதி பலி; மூவர் படுகாயம்

கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

ஜனவரி 21, 2025 - 18:21
கண்டி  விபத்தில் யுவதி பலி; மூவர் படுகாயம்

தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து உடுதெனிய பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், மயிலப்பிட்டி பகுதியிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பஸ் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில், 18 வயது யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, முச்சக்கரவண்டியின் சாரதி, யுவதியின் தந்தை, மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ரிகலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னே சென்ற வாகனத்தை முச்சக்கரவண்டி முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே எதிரே வந்த பஸ்ஸில் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தினை அடுத்து பஸ் சாரதியை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)

 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!