பஸ்ஸை நிறுத்தாத சாரதி மீது பாம்பை வீசிய பெண் 

ஆத்திரமடைந்த அந்த பெண், பீர் பாட்டிலை தூக்கி எறிந்து கண்ணாடியை உடைத்து பேருந்தை சேதப்படுத்தினார்.

ஆகஸ்ட் 9, 2024 - 22:31
ஆகஸ்ட் 9, 2024 - 22:32
பஸ்ஸை நிறுத்தாத சாரதி மீது பாம்பை வீசிய பெண் 

இந்தியாவின் ஹைதராபாத் நகரின் நல்லகுண்டா பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், அவ்வழியாக வந்த பஸ்ஸை நிறுத்த முயன்றார். 

ஆனால், பஸ்ஸை சாரதி நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், பீர் பாட்டிலை தூக்கி எறிந்து கண்ணாடியை உடைத்து பேருந்தை சேதப்படுத்தினார்.
 
இதை அடுத்து பேருந்தை நிறுத்திய சாரதி கண்ணாடியை உடைத்தது குறித்து கேள்வி எழுப்பி, அந்த பெண்ணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அப்போது அந்த பெண், தான் பையில் வைத்திருந்த பாம்பு குட்டியை சாரதி மீது வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் நடத்தி விசாரணையில் பாம்பு குட்டியை வீசிய பெண் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்தப் பெண்ணை விசாரணைக்காக பொலிஸார் அழைத்து சென்றனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!