மனைவியின் தவறான தொடர்பு - மகளுடன் ரயிலில் பாய்ந்த கணவன்
வேறொரு நபருடன் தனது மனைவி தகாத உறவைப் பேணுவதையறிந்து , 38 வயதுடைய கணவன் தனது 6 வயது மகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பலியாகியுள்ளார்.

வேறொரு நபருடன் தனது மனைவி தகாத உறவைப் பேணுவதையறிந்து , 38 வயதுடைய கணவன் தனது 6 வயது மகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து பலியாகியுள்ளார்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு நோக்கி சென்ற ரயிலில், ராஜ எல பகுதியில் வைத்து குறித்த நபர் நேற்றிரவு இவ்வாறு பாய்ந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடு திரும்பியதாகவும் அங்கு வேறொரு நபருடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவரும் கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.