காலநிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வட மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
அத்துடன் இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.