இந்திய அணியில் என்ன நடக்கிறது என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட தெரியாது - ரோகித் சர்மா

இந்திய அணியில் இருக்கும் பலவீனங்கள், உலகக்கோப்பைத் தொடருக்கான திட்டங்களை உருவாக்க கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு செய்துள்ளனர்.

ஜுலை 27, 2023 - 12:58
ஜுலை 27, 2023 - 12:59
இந்திய அணியில் என்ன நடக்கிறது என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட தெரியாது - ரோகித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. 

இதன் மூலம் இந்திய அணியில் இருக்கும் பலவீனங்கள், உலகக்கோப்பைத் தொடருக்கான திட்டங்களை உருவாக்க கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக 10 முதல் 12 ஒருநாள் போட்டிகளில் நாங்கள் விளையாட இருக்கிறோம். 

எப்படி விளையாட வேண்டும் என்று தயாராவதற்கு இந்த ஆட்டங்கள் போதுமானதாக உள்ளது. சரியான காம்பினேஷன் மற்றும் உலகக்கோப்பைக்கான திட்டங்களையும் இந்த போட்டிகள் மூலம் உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் 5 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி வெளிநாட்டில் சதம் விளாசியது பற்றிய கேள்விக்கு, இந்த கேள்விக்கு ஏற்கனவே பதில் கூறியிருக்கிறேன். இந்திய அணியில் என்ன நடக்கிறது என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட தெரியாது.

காத்திருந்து காத்திருந்து.. ஆஷஸை பறிகொடுத்த இங்கிலாந்து.. கொண்டாட்டத்தில் ஆஸ்திரேலியா!

அதனால் மக்கள் பேசுவது பற்றியோ, வெளியில் என்ன விமர்சனங்கள் வருகிறது என்பது பற்றி கொஞ்சமும் கவலையில்லை. எங்களுக்கு வெற்றி மட்டுமே ஒரே குறிக்கோள். இந்திய அணியில் உள்ள ஏராளமான அனுபவ வீரர்கள் பற்றி நாம் பேச வேண்டிய தேவையே இல்லை.

ஏனென்றால் அவ்வளவு போட்டிகளில் வீரர்கள் விளையாடி தங்களை நிரூபித்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கான ரன்களும், நூற்றுக்கணக்கான விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்காக போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்கள். அதனால் எங்களின் கவனம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து, அவர்களுக்கான சரியான வாய்ப்பை வழங்குவதில் மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பும்ராவின் கம்பேக் பற்ரிய கேள்விக்கு, ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் விலை மதிக்க முடியாத வீரர். அவரின் அனுபவமும், திறமையும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்றே நினைக்கிறேன். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை.

ஆனால் என்சிஏ உடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். முழு உடற்தகுதியை எட்டிய பின் இந்திய அணிக்கு திரும்புவார். உலகக்கோப்பைக்கு முன் சில போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!