ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவு

மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

டிசம்பர் 19, 2024 - 15:53
டிசம்பர் 20, 2024 - 00:21
ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை உத்தரவு

மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர்,  இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று (19) அறிவிக்கப்பட இருந்த நிலையில், அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியாது என ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!