சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா.. வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2, 2024 - 10:54
சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா.. வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னோடித்திட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் சில வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.   

இலங்கைக்கு ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டத்தை கடந்த டிசெம்பர் 2023 ஆம் ஆண்டு இலங்கை ஆரம்பித்திருந்தது.

இதன்படி, இந்தியா, சீனா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட்டது. 

இந்த காலம் நேற்றைய (31) தினத்துடன் நிறைவடைந்திருந்த நிலையில், குறித்த திட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!