யாராலையும் உடைக்க முடியாத சச்சினின் 4 ரெக்கார்டுகள்...  கிங் கோலியால் வந்த ஆபத்து..

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய 500-வது சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 26 சதங்கள் அடித்திருக்கிறார்.

ஜுலை 22, 2023 - 21:15
யாராலையும் உடைக்க முடியாத சச்சினின் 4 ரெக்கார்டுகள்...  கிங் கோலியால் வந்த ஆபத்து..

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய 500-வது சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 26 சதங்கள் அடித்திருக்கிறார்.

இதன் மூலம் சச்சினுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். இந்த நிலையில் சச்சின் கிரிக்கெட்டில் உள்ள அனைத்து ரெக்கார்டுகளையும் படைத்து இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர் இன்று பெருமையை அவர் படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் விராட் கோலிக்கு தற்போது 34 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு எந்தெந்த சச்சின் ரெக்கார்டை உடைப்பார் என்று தற்போது பார்க்கலாம்.

ஆசியக் கோப்பைக்கு முன்னதாக ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 100 சதத்துடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது விராட் கோலி 76 சதம் அடித்து இருக்கிறார். 

விராட் கோலி இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகள் விளையாடி குறைந்தபட்சம் 25 சதங்களை அடித்தால் கூட சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார்.

இதற்கு விராட் கோலி ஆண்டுக்கு 6 சதங்கள் அடித்தால் போதுமானது. இதே போன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், விராட் கோலி 46 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதனால் இன்னும் நான்கு சதம் அடித்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார்.

4 சதம் என்பது மிகவும் எளிதான காரியம் என்பதால் அதனை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பிருக்கிறது. இதேபோன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை தற்போது சச்சின் வைத்திருக்கிறார். 

இந்த மைல் கல்லை சச்சின் எட்ட 321 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கோலி 2018 ரன்கள் அடித்திருக்கிறார். இதனால் 102 ரன்களை அவர் எளிதில் குறைந்த இன்னிங்சில் எட்டி விடுவார் என்பதால் சச்சினின் இந்த சாதனையும் முறியடிக்கப்படும்.

இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் 20 சதம் உடன் இருக்கிறார். தற்போது இந்த ரெகார்ட் அருகே வந்திருக்கும் விராட் கோலி பதினாறு சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 

இதனால் இந்த ரெக்கார்டையும் உடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும் சச்சினின் அதிக சர்வதேச ரன்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் போன்ற ரெக்கார்டுகளை உடைக்க வேண்டும் என்றால் விராட் கோலி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!