ஆசியக் கோப்பைக்கு முன்னதாக ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர வீரர்
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்தார்.

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்தார்.
தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை கூறியுள்ளார்.
லஹிரு திரிமான்ன, 44 டெஸ்ட் போட்டிகள், 127 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 26 சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.