தேர்தல் வெற்றிக்கு விஜய் வகுத்துள்ள புதிய வியூகம்: 3 மணி நேரம் ஆலோசனை

தமிழகத்தில்2026-ம் ஆண்டு நடைபெற  உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

பெப்ரவரி 11, 2025 - 16:00
பெப்ரவரி 11, 2025 - 16:02
தேர்தல் வெற்றிக்கு விஜய் வகுத்துள்ள புதிய வியூகம்: 3 மணி நேரம் ஆலோசனை

தமிழகத்தில்2026-ம் ஆண்டு நடைபெற  உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளார்.

தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய் வருகிற சட்ட மன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் என்று கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளா்.

இது தொடர்பாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் பிரசாந்த் கிஷோர்- விஜய் சந்திப்பு நடைபெற்று உள்ளது.

இதன்போது, இருவரும் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தியதுடன், விஜய் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஆரோக்கியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

விஜய்யை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அவரது தொண்டர்களின் கருத்தாக உள்ள நிலையில், இதனை மையப் படுத்தியே நேற்றைய ஆலோசனையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

இதற்காக ஆதவ் அர்ஜுனா மூலமாக புதிய கூட்டணி அழைப்பதற்கு விஜய் முடிவு செய்திருப்பதாகவும் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!