நடிகர் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதி!
மலேசியா, லங்காவி தீவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, 'நான்' என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நாயகனாக, தன் தனித்துவ நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இன்னும் சொல்ல வேண்டும் 'யார் படம்? விஜய் ஆண்டனி படமா? அப்ப பார்க்கலாம் பா' என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
அதற்கு முக்கிய காரணம் 2016-ல் இயக்குனர் சசி இயக்கியிருந்த 'பிச்சைக்காரம்' படம் தான். கதாநாயகனாக விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. இதற்காக விஜய் ஆண்டனி தற்போது மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் உள்ளார்.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து, கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.