இலங்கை மகளிர் அணி அபார வெற்றி; உலகக்கிண்ணத்துக்கு தகுதி

நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து  மகளிர் அணி முதலில் களதடுப்பு செய்ய முடிவு செய்தது.

மே 8, 2024 - 10:36
மே 8, 2024 - 10:36
இலங்கை மகளிர் அணி அபார வெற்றி;  உலகக்கிண்ணத்துக்கு தகுதி

ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து  மகளிர் அணி முதலில் களதடுப்பு செய்ய முடிவு செய்தது.

அதன்படி, இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. சாமரி அத்தபத்து 102 ரன்களை விளாசினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மகளிர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

உதேஷிகா பிரபோதனி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!