வாகன இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு 2025 இல் சாத்தியமாகும்; வெளியான தகவல்

சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.

ஜுன் 17, 2024 - 17:03
வாகன இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு 2025 இல் சாத்தியமாகும்; வெளியான தகவல்

அடுத்து வருடத்துக்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் யோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

" இலங்கையில் தற்போது, ​​வாகனங்கள் இறக்குமதி மட்டுமே கட்டுப்பாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. 2023 முதல் காலாண்டில் 10 வீதத்தால் சுருங்கிய நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் தற்போது  5.3 சதவீதமாக உள்ளது.

அதன்படி, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், 2025 ஆம் ஆண்டளவில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

நீண்டகால பொருளாதார வேலைத்திட்டத்துக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.

சமூகத்தை நல்ல முறையில் பேணுவதற்கு அரசாங்க அமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதிலேயே அரசாங்கத்தின் கவனம், சுதந்திர சந்தைக்கு தேவையான சூழலை நாட்டில் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!