வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை. அரசாங்கத்துக்கு அத்தகைய நோக்கம் இல்லை.

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஆளுநர் இதனைக் கூறியுள்ளார்.
"வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை. அரசாங்கத்துக்கு அத்தகைய நோக்கம் இல்லை. எனக்குத் தெரிந்தவரை, வாகன இறக்குமதி குறித்து நிதியமைச்சர் அத்தகைய மாற்றத்தைச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை.” என நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.