நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதி: வெளியான அறிவிப்பு
வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலை அடுத்து, நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலை அடுத்து, நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து வாகன இறக்குமதியாளர்கள் விரைவில் அறிக்கைவழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடலின் போது, வாகன இறக்குமதியாளர்கள் நிதி இராஜாங்க அமைச்சரிடம், அனைத்து இறக்குமதிகளையும் ஒரே நேரத்தில் அனுமதிப்பதற்குப் பதிலாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் சாத்தியமானதாக இருக்கும் என கூறியுள்ளனர்.
இதன்போது, பொது போக்குவரத்து, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களுக்கான வாகன இறக்குமதியை வகைப்படுத்த அவர்கள் முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.