காய்கறி விலை எதிர்பாராத விதமாக உயர்வு
அண்மைகாலமாக இலங்கை சந்தையில் காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அண்மைகாலமாக இலங்கை சந்தையில் காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
கொழும்பு பிரதான சந்தையில் நேற்று (23) காலை மரக்கறிகளின் மொத்த விலையும் உயர்வாக காணப்பட்டதுடன், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சந்தைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் மரக்கறிகளின் சில்லறை விலையும் ஒரே நேரத்தில் அதிகரித்திருந்தது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்படும் மரக்கறிகளின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.