பாராளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப் பிரமாணம்
புதிய பாராளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்தார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன மரணமடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வீரசேன கமகே நியமிக்கப்பட்டார்.
1945 இல் பிறந்த வீரசேன கமகே, 1991 இல் அரசியல் நடவடிக்கைளை ஆரம்பித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கெக்கிராவ பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளார்.