இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உச்சத்தை எட்டிய அமெரிக்க டொலர்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் படி, இன்று ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 306.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.81 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இன்று (07) அமெரிக்க டொலருக்கான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆக பதிவாகியுள்ளது.
2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர், அமெரிக்க டொலரின் சராசரி பெறுமதி ரூ. 310 என்ற எல்லையை கடந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதன்மூலம் வெளிநாட்டு நாணய சந்தையில் டொலரின் வலிமை மீண்டும் அதிகரித்துள்ளமை தெளிவாகியுள்ளது.
அதேவேளை, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் படி, இன்று ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 306.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.81 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய், அமெரிக்க டொலருக்கு எதிராக 5.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி முன்னர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.