இணைய சட்டம் பற்றி ஐ.நா. பிரதிநிதியுடன் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே ஃபிராஞ்ச், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று (01) விஜயம் செய்து, அமைச்சர் டிரான் அலஸை சந்தித்தார்.
இதன்போது, இலங்கை ஐக்கிய நாடுகள் சபை ஆதரவை வழங்கக்கூடிய வழிகள் மற்றும் இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இணைய அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உலகளாவிய தேவை என்று மார்க் ஆண்ட்ரே கூறினார்.
அதன்போது, டிரான் அலஸ், இணைய அமைப்புகளின் பாதுகாப்பு குறித்த சட்டமூலத்துக்கு கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதன்போது, இணைய அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அமைப்புகளுடன் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை பரிமாறிக்கொள்ள இலங்கைக்க ஆதரவு வழங்கப்படும் என்று மார்க்-ஆன்ட்ரே கூறியுள்ளார்.