நீராட சென்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள சோகம்
ஆற்றில் நீராட சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கிய இரு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆற்றில் நீராட சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கிய இரு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பலாங்கொடை, வளவ ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் நேற்று (11) பதிவாகியுள்ளது.
பலாங்கொடை - எல்லே, அரவ மற்றும் பென்கியவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய பாடசாலை மாணவர்களே நீரில் மூழ்கியுள்ளனர்.
இதேவேளை, செவனகல பிரதேசத்தில் தந்தை மற்றும் இளைய சகோதரருடன் நீராட சென்ற 12 வயது சிறுவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.