இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு
மொனராகலை மற்றும் கரடுகல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை மற்றும் கரடுகல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
இன்று (04) அதிகாலை வீட்டுக்கு வந்த ஒருவரால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை, கிண்ணியாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாமல் ஓயா பிரதேசத்தில் 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கரடுகலவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இன்று அதிகாலை பொலிஸ் நிலையத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவருக்கு 42 வயது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.