உலகக்கிண்ண இலங்கை அணியில் இணைய இரண்டு வீரர்களுக்கு அவசர அழைப்பு

உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 19, 2023 - 23:08
ஒக்டோபர் 21, 2023 - 12:57
உலகக்கிண்ண இலங்கை அணியில் இணைய இரண்டு வீரர்களுக்கு அவசர அழைப்பு

உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளன.

துஷ்மந்த சமீர முழுமையாக குணமடைந்துள்ளதால் அவரை அணிக்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தேர்வாளர் குழு தீர்மானித்திருந்தது.

மதீஷ பத்திரனவின் பந்துவீச்சுக் கையில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக பத்து நாட்களுக்கும் அதிகமாக அவர் ஓய்வில் இருக்க வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அத்துடன், 36 வயதான ஏஞ்சலோ மெத்யூஸை அணியில் இணைத்துக்கொள்ளும் திட்டம் முன்னதாக தேர்வாளர்களுக்கு இருக்கவில்லை. 

ஆனால் மிடில்-ஆர்டரில் இலங்கை அணி தவறாக செயல்படுவதால், அவரைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருவதால், மெத்யூஸ் அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு முதல் மெத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!