கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சகோதரர்கள் கைது
மஹாஓயா, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மஹாஓயா, சமகிபுர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (13) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹாஓயா, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மஹஓயா, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 18 மற்றும் 23 வயதுடைய சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.