ட்ரம்ப் அமெரிக்காவுக்கு இடம்பெயர்வை முற்றிலும் நிறுத்த திட்டம்: புலம்பெயர்ந்தோர் மீது அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் இடம்பெயர்வை முழுமையாக நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நவம்பர் 29, 2025 - 06:04
ட்ரம்ப் அமெரிக்காவுக்கு இடம்பெயர்வை முற்றிலும் நிறுத்த திட்டம்: புலம்பெயர்ந்தோர் மீது அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் இடம்பெயர்வை முழுமையாக நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட தனது பதிவில், இவர் கடந்த ஜோ பைடன் நிர்வாகத்தின் மில்லியன் கணக்கான குடியேற்ற அனுமதிகளை ரத்தம் செய்ய உள்ளதாகவும், அமெரிக்காவுக்கு பயன்படாதவர்கள் மற்றும் நாட்டை நேசிக்க முடியாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 

அதே சமயம், அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளையும் நிறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப், இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்கா மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!