இன்று முதல் வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்
ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (10) பிற்பகல் நிறைவுக்கு வந்தது.

ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (10) பிற்பகல் நிறைவுக்கு வந்தது.
இதனையடுத்து, இன்று (11) முதல் ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6ஆம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ரயில் பொது முகாமையாளர் எழுத்துமூலமாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது.
அதன்படி, இன்று காலை முதல் ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்திபோலகே தெரிவித்துள்ளார்.