'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு

2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

ஏப்ரல் 29, 2025 - 16:04
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு

2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உருவாகி உள்ளது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். 

இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஆப்ரோ இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வருகின்ற மே மாதம் 16ம் திகதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!