இன்றைய வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யும்.
தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மின்னலினால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அவதானம் தேவை.