வாரத்தின் தொடக்கத்தில் நகை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று (26) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,270 ரூபாயாக காணப்படுகின்றது.
அத்துடன், 24 கரட் தங்க கிராம் 26,720 ரூபாயாக பதிவாகி உள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 213,700 ரூபாயாக உள்ளது.
மேலும், 22 கரட் தங்க கிராம் 24,500 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 195,950 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,380 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் 187,050 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.