நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (ஜுலை 31) சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்துள்ளதுடன், நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,385 ஆகவும் சவரன், ரூ.51,080 ஆகவும் இருந்தது.
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, 6,425 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 320 அதிகரித்து, 51 ஆயிரத்து 400 ஆகவும் உயர்வடைந்துள்ளது.
அத்துடன், கடந்த மாதங்களில் 55 ஆயிரத்தை தாண்டி சென்ற தங்கத்தின் விலை தற்போது 51 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வருகின்றது.