வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை... இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துவரும் நிலையில், சென்னையில் இன்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது. 

ஆகஸ்ட் 17, 2023 - 16:43
வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை... இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

தங்கத்தின் விலை அண்மைய நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துவரும் நிலையில், சென்னையில் இன்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது. 

நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,495 ஆகவும், சவரன், ரூ.43,960 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.39 குறைந்து,, 5,456 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 312 குறைந்து, 43 ஆயிரத்து 648 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

இதே போன்று வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.75.70 ஆகவும், கிலோவிற்கு ரூ.75,700 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!