நீண்ட நாட்களுக்கு பின்பு தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த வாரத்தில் ஆபணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகின்றது.
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,855 ஆகவும், சவரன், ரூ.54,840 ஆகவும் இருந்து வந்தது.
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து, 6,790 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 520 குறைந்து, ரூபாய் 54 ஆயிரத்து 320 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.89.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.89,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.