ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி; இருவர் உயிரிழப்பு

மதுரை தாய்நகர் விவேகானந்தர் தெருவில் வறுமை நிலையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 19, 2025 - 11:25
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி; இருவர் உயிரிழப்பு

மதுரை தாய்நகர் விவேகானந்தர் தெருவில் வறுமை நிலையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

கணவரை இழந்த ஜீவகுமாரி என்பவர் அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து 14 வயதான மகள் தனலட்சுமி மற்றும் 12 வயதான மகன் தனசிங்கப் பெருமாளைக் காப்பாற்றி வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
கடந்த சில நாட்களாகவே அக்கம்பக்கத்தினருடன் பேசாமல் இருந்த ஜீவகுமாரி, மகனுக்கும் மகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாமும் அருந்தியுள்ளார். 

இதில் ஜீவகுமாரியும் தனலட்சுமியும் உயிரிழந்த நிலையில், தனசிங்கப் பெருமாள் உயிருக்குப் போராடி வருகிறார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!