பேருந்துக்கு அடியில் சிக்கி உயிரிழந்த ஆசிரியர்
தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ் என்பன மோதி இன்று (22) காலை ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், விபத்தில் காயமடைந்த 7 வயது சிறுமி லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலன்னாவை பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வெள்ளம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 36 வயதுடைய ஆசிரியர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்தினையடுத்து, பிரதேசவாசிகள் பஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், காயமடைந்த பஸ் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (News21)