அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை மகளிர் அணி!
தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டித் தொடரில், தாய்லாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இவ்வாறு அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தாய்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 11.03 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணித்தலைவி சமரி அத்தப்பத்து அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 39 ஓட்டங்களையும் பெற்றனர்.