ஈ - விசா தொடர்பில் மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26, 2024 - 11:03
ஏப்ரல் 26, 2024 - 11:15
ஈ - விசா தொடர்பில் மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

இணைய வழியில் ஈ - விசா பெற்றுக் கொள்வோர் www.immigration.gov.lk என்ற முகவரியை மட்டும் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போலி இணைய தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஈ - விசா பெற்றுக்கொள்வோர் திணைக்களத்தின் உத்தியோகப்பபூர்வ இணைய தளத்தின் ஊடாக பிரவேசித்து விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!