வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலி

புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ஏப்ரல் 18, 2023 - 15:11
வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலி

(க.கிஷாந்தன்)

புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இவ்விபத்து இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதிக இரத்தபோக்கு ஏற்பட்டதால் குறித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் புஸ்ஸலாவ பொலிஸார்,  கம்பளை பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!