எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான தகவல்!
இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் காணப்படும் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த உள்நாட்டில் விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த மாத விலை திருத்தத்தின் படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், எரிவாயு விலையிலும் அதிகரிப்பு இடம்பெறலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.