ஆஷஸ் 4வது டெஸ்ட்.. எங்கேயோ மச்சம் இருக்கு.. தோற்க வேண்டிய போட்டி இப்படி ஆச்சே?
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வி பெரும் தருவாயில் இருந்த நிலையில் தற்போது அதிசயமாக காப்பாற்றப்பட்டு இருப்பது இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வி பெரும் தருவாயில் இருந்த நிலையில் தற்போது அதிசயமாக காப்பாற்றப்பட்டு இருப்பது இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் முன்னிலை உள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 317 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் அபாரமாக விளையாடியது. தொடக்க வீரர் சாக் கிராலி 189 ரன்கள் விளாச ஜோ ரூட், மோயின் அலி மற்றும் ஹாரி புருக், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
சிறப்பாக விளையாடிய ஜானி பாரிஸ்டோ 99 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 592 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 275 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
யாராலையும் உடைக்க முடியாத சச்சினின் 4 ரெக்கார்டுகள்... கிங் கோலியால் வந்த ஆபத்து..
இதில் உஸ்மான் கவஜா 18 ரன்களிலும், டேவிட் வார்னர் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 17 ரன்களிலும் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற பரிதாபமான நிலையில் இருந்தது.
இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு வருண பகவான் உதவி செய்திருக்கிறார். இன்று காலை முதலே கனமழை பெய்து வந்ததால் ஆட்டத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மதிய நேரம் வரை ஒரு பந்து கூட வீச முடியாமல் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா அணி காப்பாற்றப்பட்டது. மேலும் ஆடுகளம் ஈரப்பதமாக மாறியதால் பந்தும் ஸ்விங் ஆகவில்லை. இதன் காரணமாக லாபஸ்சேன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
இந்த நிலையில் அவர் 111 ரன்களில் ஆட்டமிழக்க, தேநீர் இடைவெளியின் போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் அந்த செஷனில் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 214 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற ஸ்கூருடன் நான்காவது நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டுள்ளது.
தற்போது கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு ஐந்து விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இன்னும் 61 ரன்கள் பின்தங்கி இருக்கிறார்கள்.
இன்னிங்ஸ் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்த இங்கிலாந்து அணி தற்போது மழை காரணமாக போட்டியை டிரா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.