கட்சி பிளவுபட்டதால் எம்.பி பதவியை இராஜினாமா செய்யும் தலதா அத்துகோரள!

நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

ஆகஸ்ட் 21, 2024 - 14:58
ஆகஸ்ட் 21, 2024 - 15:02
கட்சி பிளவுபட்டதால் எம்.பி பதவியை இராஜினாமா செய்யும் தலதா அத்துகோரள!

ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபட்டதால், கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக நாடாளுமன்றத்தில் இன்று (21) கருத்து வெளியிட்ட  தலதா அத்துகோரள, தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாகவும் தெரிவித்தார். 

“ஊழல் அரசியல்வாதிகள்” என முன்னர் முத்திரை குத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன் மூலம் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அத்துகோரள தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.

“சஜித் பிரேமதாச, தனது சொந்த அரசியல் எதிர்காலத்திற்காக இன்னும் ஐந்து வருடங்கள் பொறுமையாக இருந்திருந்தால், இந்த சவாலை நாங்கள் எதிர்கொண்டிருக்க மாட்டோம். நான் சஜித் பிரேமதாசவிடம் கூறுகின்றேன், உங்களை இந்தப் பாதாளத்திற்குத் தள்ளுபவர்கள், அடுத்த முறை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க விரும்புகிறார்கள். அவர்கள் உங்களை ஜனாதிபதியாக்க விரும்பவில்லை” எனவும் தலதா அத்துகோரள தெரிவித்தார். 

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கட்சி மாறுவார் என அண்மைக்காலமாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!