ஆசிரியர் கல்லூரிக்கு செல்ல தயாராக உள்ளவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் ஆசிரியர் கல்லூரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் கல்லூரிக்கான இறுதிப் பரீட்சை (2022/2023/2025) இம்மாதம் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 04 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் ஆசிரியர் கல்லூரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
அத்துடன், பரீட்சை தொடர்பான தகவல்களை பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேற்று சபை கிளையிலிருந்து 011-2784208 அல்லது 011-24784537 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது 1911 என்ற இலக்கத்தில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.