ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்களால் குழம்பிபோன ஆசிரியர்கள்
சக மாணவர்களும் எங்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகின்றனர் என இரட்டையர்கள் கூறுகின்றனர்.

கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.
தற்போது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பில் 5 இரட்டையர்கள் உள்ளனர். அந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்ப்பதற்கு அச்சு அசல் ஒரே மாதிரி காட்சி அளிக்கும் அந்த இரட்டையர்கள் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக உள்ளனர்.
அவர்களது பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள். இது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவியது.
அந்தவகையில், 9-ம் வகுப்பில் 62 மாணவர்கள் உள்ளனர். இதில், 5 இரட்டையர்கள் படிக்கின்றனர்.
2010-11 -ம் ஆண்டு பிறந்த பாத்திமா ரவுலா-ஆயிஷா ரைஃபா, ஹலிமத் ரஃபியா-துலைகத் ரூபியா, பாத்திமா கமிலா-பாத்திமா சமிலா, கதீஜா ஜியா-ஆயிஷா ஜிபா, ஜான்வி-ஷ்ரனாவி ஆகிய இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒரே போல இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், சக மாணவர்களும் எங்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகின்றனர் என இரட்டையர்கள் கூறுகின்றனர்.
தற்போது, இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.