பல்பொருள் அங்காடியில் திருடிய குற்றத்தில் வைத்தியர் கைது!
விசாரணையில், அவர் வைத்தியசாலை நிர்வாகத்திற்குச் சொந்தமான பொருட்களைத் திருடியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில், பெண் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியரை, கடந்த திங்கட்கிழமை (19) கிரிபத்கொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டில் இருந்து 1,700 ரூபாய் தேயிலை பாக்கெட்டுடன் வெளியேற முயன்றபோது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் சோதனை செய்யப்பட்டார்.
சூப்பர் மார்க்கெட் அதிகாரிகள் அவரது கைப்பையை சோதித்ததில் மூன்று சாக்லேட்டுகள், ஒரு பால் பவுடர் டின் மற்றும் ஒரு பாக்கெட் சாசேஜ்கள் இருந்தன.
இது தொடர்பில் பல்பொருள் அங்காடி நிர்வாகத்தினர், பொலிஸில் முறையிட்டதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டார்.
பிரதேச அரச வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் களனியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் வைத்தியரே, இவ்வாறு கிரிபத்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், அவர் வைத்தியசாலை நிர்வாகத்திற்குச் சொந்தமான பொருட்களைத் திருடியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹர நீதவான் நீதிமன்றத்தில் வைத்தியர் ஆஜர்படுத்தப்பட்ட போது 200,000 ரூபாய் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.