கொழும்பில் பலத்த காற்று; முறிந்து விழுந்த மரங்கள்
கொழும்பு உட்பட பல பகுதிகளில் நேற்று (30) இரவு பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் நேற்று (30) இரவு பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு-காலி வீதியிலும், கிராண்ட்பாஸைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததைக் காண முடிந்தது.
கிராண்ட்பாஸில் உள்ள புனித ஜோசப் அவென்யூவில் ஒரு பெரிய மரம் விழுந்ததில் அருகிலுள்ள ஆறு வீடுகள் சேதமடைந்தன.
இந்த விபத்தில் இருந்து குடியிருப்பாளர்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.