தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்; விவரம் இதோ
கடந்த சில தினங்களாக இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை இன்று (18) சடுதியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை இன்று (18) சடுதியாக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 707,906 ரூபாயாக காணப்படுகின்றது.
24 கரட் தங்க கிராம் ஒன்று 24,980 ரூபாயாகவும் 24 கரட் தங்கப் பவுண் 199,800 ரூபாயாக உள்ளது.
22 கரட் தங்க கிராம்22,900 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண்183,200 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,860 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்174,900 ரூபாயாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம்.