இலங்கை ரயில் டிக்கெட்டுகளை இப்போது இணையத்தில் வாங்கலாம்
www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பயணிகள் தற்போது டிஜிட்டல் ரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும்.

ரயில் பயணச்சீட்டுகளை இணைய வழியில் வழங்கும் நடவடிக்கை நேற்று (22) முதல் அமலுக்கு வந்துள்ளது.
www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பயணிகள் தற்போது டிஜிட்டல் ரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
அத்துடன், டிக்கெட்டுகளை நேரில் வாங்க விரும்புவோருக்கு கவுன்டர்களில் தொடர்ந்து கிடைக்கும்.
"இந்த ஆண்டு இறுதிக்குள் சீசன் டிக்கெட்டுகளுக்கு இந்த ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக, ரயில் இருக்கை முன்பதிவு மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான புதிய முறைகள் அடுத்த மூன்று மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும்" என்று போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறினார். (நியூஸ்21)