குடிநீருக்கு விலை சூத்திரம்; கட்டணங்களில் வரவுள்ள மாற்றம்
வணிக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

கொழும்பு, நவ. 29 (நியூஸ்21) – குடிநீருக்கான விலை சூத்திரத்தை உருவாக்கி வருவதாகவும், வணிக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
வரைவு விலைச் சூத்திரம் டிசெம்பரில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மதஸ்தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு குறைந்த கட்டணத்தில் நீர் வழங்கப்படும் என்று அமைச்சர் தொண்டமான் ஜனாதிபதி ஊடக மையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று (28) தெரிவித்தார்.