காயமடைந்த சைக்கிளின் செலுத்துநர், புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தில் கார் சிறியளவில் சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றும் காலை முதல் 50 தொடக்கும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள கைதிகளை பார்வையிடும் விசேட சந்தர்ப்பம், எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் வேக வரம்புகள்: வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.