வாகன வேக வரம்புக்கு வருகிறது கட்டுப்பாடு - வெளியாகவுள்ள வர்த்தமானி
வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேக வரம்புகள் தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
வீதிகளில் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபாயை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு 2214 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துக்களில் 2321 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடமும் கடந்த மாதம் 30ஆம் திகதி வரை 1103 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அந்த வீதி விபத்துகளினால் 1154 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த நிலைமையைக் குறைக்க எங்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது". என அமைச்சர் கூறியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.